துப்பாக்கிச் சூடு; மூவர் மரணம்

துப்பாக்கிச் சூடு; மூவர் மரணம்

1 mins read
Google News Preferred Icon

மெக்சிக்கோ சிட்டி: மெக்சிக் கோவில் உள்ள சுற்றுப்பயணத் தளத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணமடைந்தனர். நேற்று முன்தினம் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் குறைந்தது ஏழு பேர் காயமுற்றனர். 'மரியாச்சி' எனும் இசைக் கலைஞர்களைப் போல் அங்கு வந்த மூன்று ஆடவர்கள் அங்கிருந்தவர்களைத் துப்பாக்கி யால் சுட்டுவிட்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றதாக போலிசார் தெரிவித்தனர். பிளாசா காரிபால்டி எனும் அந்தச் சுற்றுப்பயணத் தளத்திற்கு வெளியே இருக்கும் சாலை சந்திப்பில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்த போலிசார் அவ்விடத்தைச் சுற்றி தடுப்பு போட்டனர். பிளாசா காரிபால்டியில் போலி சார் விசாரணை நடத்துவதை மெக்சிக்கோ தொலைக்காட்சி காட்டியது. 20-14ஆம் ஆண்டிலிருந்து மெக்சிக்கோவில் கொலைக் குற்றங்கள் வெகுவாக உயர்ந் துள்ளன. இக்குற்றங்களுக்குப் போதைப் பொருள் கடத்தும் கும்பல்கள் காரணம் என்று அந்நாட்டுப் போலிஸ் படை கூறுகிறது. போதைப் பொருள் விற்பனை, குண்டர் கும்பல் ஆகிய பிரச்சி னைகள் கொண்ட வட்டாரங் களுக்கு அருகில் பிளாசா காரிபால்டி இருப்பது குறிப் பிடத்தக்கது.