சிறையில் வைக்கப்பட்ட செய்தியாளர்கள்; மியன்மாரில் தொடரும் ஆர்ப்பாட்டம்

சிறையில் வைக்கப்பட்ட செய்தியாளர்கள்; மியன்மாரில் தொடரும் ஆர்ப்பாட்டம்

1 mins read

யங்கூன்: 'ராய்ட்டர்ஸ்' செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு செய்தியார்கள் சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிராக குறைந்தது 100 இளையர்களும் செய்தியாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நிருபர்கள் 32 வயது வா லோனும் 28 வயது கியாச் சோய் ஊவும், அந்நாட்டின் அதிகாரபூர்வ சட்டத்தின்படி குற்றவாளிகள் என அதன் நீதிமன்றம் உறுதி செய்தது.

இந்தச் செய்தியாளர்களுக்கு விதிக்கப்பட்ட ஏழு ஆண்டு சிறைத்தண்டனை, மக்களின் கருத்துச் சுதந்திரத்தை அச்சுறுத்துவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கருதுகின்றனர். யங்கூனில் அவர்கள் தங்களது எதிர்ப்பை பிரதிபலிக்கும் பாதகைகளை ஏந்திக்கொண்டு பல்வேறு வாசகங்களை முழங்கிக்கொண்டிருந்தனர். ஆயினும் இந்த தண்டனைகள் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானதல்ல என்று அந்நாட்டு தலைவர் திருவாட்டி ஆங் சான் சூச்சி கடந்த வாரம் தெரிவித்தார்.