பணக்கார நாடுகளில் பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு ஊதிய உயர்வு

1 mins read

உலகின் ஆக பணக்கார நாடு களைச் சேர்ந்த ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்குச் சம்பள உயர்வு கிடைத்துள்ளது. அமெரிக்கா, ஜப்பான், ஐரோப் பிய ஒன்றியம் ஆகியவற்றில் வேலையின்மை குறைந்து வரு வதால், ஊழியர்களை ஈர்க்கவும் தக்கவைக்கவும் நிறுவனங்கள் வேறு வழியின்றி சம்பளங்களை உயர்த்தி வருவதாகவும் இவ் வாண்டின் இரண்டாம் காலாண்டில் இந்தச் சம்பள உயர்வு 2.5% உயர்ந்திருப்பதாகவும் 'ஜேபி மார்கன் என்ட் சேஸ்' நிதி முத லீட்டு வங்கி தெரிவித்தது. 2009ஆம் ஆண்டில் நடந்த அனைத்துலக பொருளியல் தேக் கம் நடந்தது முதல் இன்று வரை இவ்விகிதம் ஆக அதிகமாக இருப்பதாக இவ்வங்கி கூறியது.

அடுத்தாண்டு இவ்விகிதம் 3% உயரும் என்றும் அது கூறியது. கூடுதலான வருமானம், பொருளியல் மீட்சியை ஆதரிக்கும் என்றும் நிபுணர்கள் கருதுகின் றனர். பணவீக்கம் அதிகரிக்கும் முன்னர் அமெரிக்க மத்திய வங்கி களும் மற்ற நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்களது வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முன்னேற்றம் நிலையாக இருந்தால், ஊதியத்திற்கும் வேலை வாய்ப்புக்கும் உள்ள தொடர்பு இன்னும் நன்றாக அறியப்படலாம். ஊதிய வளர்ச் சியின் கட்டுப்பாட்டினால் திரு டோனல்ட் டிரம்ப் அதிபரானதற்கும் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத் தைவிட்டு வெளியேற அந்நாட்டு மக்கள் வாக்களித்ததற்கும் ஒரு முக்கிய காரணம் என்று அறிக்கை குறிப்பிடுகிறது.