இரு கொரியாக்களின் இணைப்பை அதிகம் விரும்பும் வடகொரியர்கள்

இரு கொரியாக்களின் இணைப்பை அதிகம் விரும்பும் வடகொரியர்கள்

1 mins read

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் தென்கொரிய தலைவர் மூன் ஜேயினும் இன்று சந்திக் கவுள்ள வேளையில், இரு கொரி யாக்கள் இணைவது குறித்த யோசனையை வடகொரியா மீண் டும் முன்வைத்துள்ளது. ஆயினும், 1940களில் இரண்டுபட்ட இந்நா டுகள் சேர்வது குறித்து தென் கொரியர்களின் ஆதரவு வலுவாக இல்லை என நிபுணர்கள் கருது கின்றனர்.

"இரு நாடுகள் இணைவதால் தென்கொரியின் பொருளாதார சுமை மேலும் அதிகரிக்கும் என்ப தால் தென்கொரியர்களுக்கு இது குறித்து ஆவலாக இல்லை," என்று சோலிலுன்ன கியுங்நாம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வட கொரிய ஆய்வுப்பிரிவின் பேரா சிரியர் லிம் இயுல் சுல் தெரி வித்தார். "கொரிய மக்களின் நிலையான விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் நாங்கள், மோதல்களை தவிர்த்து இணைப்பிற்கு வழி வகுக்கவேண்டும்," என்று திரு கிம் கூறியதாக வடகொரியாவின் அரசு ஊடகம் தெரிவித்தது. இந்நாடுகளுக்கு இடை யிலான உறவு மேம்படுவதற்கு, வடகொரியா மீதான பல்வேறு அனைத்துலக வர்த்தகத் தடைகள் முட்டுக்கட்டையாக உள்ளன. பல்வேறு இடையூறுகளுக்கு பின்னர், ஒத்துழைப்பு அலுவலகம் ஒன்றை இவ்விரு நாடுகளும் கடந்த வாரம் திறந்தன.

இரு நாடுகள் இணைவதில் தென்கொரியர்களைவிட வட கொரியாவிலிருந்து தென்கொரியா வுக்குத் தப்பித்துச் சென்றவர் களுக்கு அதிக ஆர்வம் இருப் பதாக சோல் தேசிய பல்கலைக் கழகம் கடந்தாண்டில் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிகிறது.