மகாதீர்: அதிக நாடாளுமன்ற இடங்கள் தேவை

மகாதீர்: அதிக நாடாளுமன்ற இடங்கள் தேவை

2 mins read

தோக்கியோ: சபா, சராவாக் ஆகிய மாநிலங்களை மலேசிய தீபகற் பத்திற்கு இணை யான மாநிலங் களாக அங்கீ கரிக்கும் அரச மைப்புச் சட்டத் திருத்தங்களைச் செய்வதற்கு பக்கத் தான் ஹராப் பான் கூட்டணிக்கு நாடாளு மன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு இடங்கள் தேவைப்படுவதாக அந்நாட்டுப் பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்தார். இந்தப் பெரும்பான்மை கிடைப் பதற்கான முயற்சி மேற் கொள் ளப்பட்டு வருவதால் பக்கத்தான் கூட்டணி தலைமையிலான அர சாங்கம், இந்தச் சட்ட திருத் தங்களைச் செய்ய கால அவகாசம் தேவைப்படுவதாக அவர் கூறினார். தற்போது, 222 நாடாளுமன்ற இடங்களில் பக்கத்தான் ஹரப் பானுக்கு 125 இடங்கள் இருப்பதாக அவர் கூறினார். அரசமைப்பு சட்டங்கள் மாற்றப் படுவதற்கு 148 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என அவர் கூறினார்.

"அரசமைப்புச் சட்டத்தின் எந் தெந்த பகுதிகளை ரத்து செய் யவேண்டும், எவற்றுக் கெல்லாம் மாற்று சட்டங்களை அறிமுகம் செய்யவேண்டும் என்பதையும் நாங்கள் ஆராய்வோம்," என்று 93 வயது டாக்டர் மகாதீர் சொன்னார். மலேசிய தீபகற்பத்திற்கு நிக ரான மாநிலங்கள் என்ற அங்கீ காரம், 1963 மலேசிய ஒப்பந்தத் தின்படி சபாவுக்கும் சரவாக்கிற் கும் மறுபடியும் வழங்கப்படும் என்று பக்கத்தான் ஹரப்பான் கூட்டணித்குத் தலைவரான அவர் தெரிவித்தார். இந்த இலக்கை அடைவதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்பதற்கு இது தொடர்பாக பணிபுரியும் நபர் களையும், சபா, சரவாக் ஆகியவை கொடுக்கும் நெருக்கு தலையும் பொறுத்து ள்ளது என்று டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.