மங்குட் சூறாவளி: மீண்டுவரும் ஹாங்காங்

மங்குட் சூறாவளி: மீண்டுவரும் ஹாங்காங்

1 mins read
ddfb1aee-0f67-4848-a1ef-a0d95d451a48
-

ஹாங்காங்: ஹாங்காங்கையும் தென்சீனாவையும் மங்குட் சூறா வளி தாக்கியதைத் தொடர்ந்து அதற் கான நிவாரண பணிகள் நடந்து வருகின்றன. ஹாங்காங்கில் பலத்த காற்று அவ்வப்போது வீசி வருவதாக அந்நகரின் வானிலை ஆய்வகம் தெரிவித்தது. சாலைகளிலிருந்து கட்டட சிதைவுகளையும் சாய்ந்த மரங் களையும் அகற்றும் பணியில் அதி காரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஓன் ஹார்பார்ப்ரன் அலுவலக கோபுரம் உள்ளிட்ட சில கட்ட டங்களின் கண்ணாடி சிதறியது. வேறு சில கட்டடங்கள், அதி வேகமாக வீசிய காற்றில் அசைந்தன.

ஹாங்காங்கில் சூறாவளி ஏற்படுத்திய சேதத்தைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் வலம் வந்தன. ஹாங்காங்கின் சிம் ஷா சுய் நகர்ப்பகுதிக்கு அருகிலுள்ள கடலின் நீர்மட்டம் சூறாவளியால் வழக்கத்தைவிட 4 மீட்டர் உயர்ந்ததாக வானிலை ஆய்வகம் தெரிவித்தது. சூறாவளியால் வட்டாரத்தில் 1,4-00க்கும் அதிகமான விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டதாக 'ப்லைட் அவேர்' என்ற விமானத் துறை ஆய்வு நிறுவனம் தெரி வித்தது. அவற்றில் பல, தற்போது வழக்கநிலைக்குத் திரும்பியது, சிங்கப்பூருக்கும் ஹாங்காங்கிற்கும் இடையிலான விமான சேவை வழக்க நிலைக்குத் திரும்பி விட்டதாக சாங்கி விமான நிலைய இணையத்தளம் காட்டுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.

ஹாங்காங்கில் சூறாவளியால் இடிந்து விழுந்த கட்டட சாரக்கட்டு களை ஆடவர் ஒருவர் பார்த்துக்கொண்டிருக்கிறார். படம்: ஏஎப்ஃபி