முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக், தமது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட பல பில்லியன் ரிங்கிட் பணம் சவூதி அரேபிய இளவரசர் தமக்கு நன் கொடையாக அளித்தவை எனக் கூறி வருகிறார். அதற்குச் சான்றாக, சவூதி இளவரசர் எழுதியதாகக் கூறி சில கடிதங்களைக் கடந்த வாரம் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் திரு நஜிப் பகிர்ந்துகொண்டார். இந்நிலையில், அந்தக் கடிதங் களில் சவூதி இளவரசர் அப்துல் அஸீஸ் அல்-=சாட் கையெழுத்திட வில்லை என்று 'தி எட்ஜ் வீக்லி' செய்தி வெளியிட்டுள்ளது.
தம்மை சவூதி அரசரின் பிரதிநிதி எனக் கூறிக்கொள்ளும் முகம்மது அப்துல்லா அல் கோமன் என்பவர், அந்தக் கடிதங்களைத் தானே தயாரித்ததாகவும் இளவர சர் சார்பில் தானே அவற்றில் கையெழுத்திட்டதாகவும் விசா ரணை அதிகாரிகளிடம் சொன்ன தாக அச்செய்தி அறிக்கை தெரி விக்கிறது. அத்துடன், நஜிப்புக்கு வழங் கப்பட்ட நன்கொடை தொடர்பான தகவல்களையும் ஆவணங்களை யும் அளிக்க முடியாது என்றும் ஏனெனில் அவை 'சவூதி அரச குடும்ப நலன்கள்' சம்பந்தப்பட் டவை என்றும் முகம்மது அப்துல்லா விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்ததாக 'தி எட்ஜ் வீக்லி' அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முகம்மது அப்துல்லாவுடனான சந்திப்புக்குப் பின், "பிளாக்ஸ் டோன் ஏஷியா ரியல் எஸ்டேட் பார்ட்னர்ஸ் மற்றும் டனோர் ஃபைனான்ஸ் ஆகிய நிறுவனங் களில் இருந்து பரிவர்த்தனை செய்யப்பட்ட பணம் சவூதி அரே பியாவின் பங்களிப்பில் வந்தவை என்பதை உறுதி செய்வதற்கு இல்லை. ஏனெனில் அது குறித்து தெளிவான தகவலும் உறுதியான சான்றுகளும் இல்லை," என்ற முடிவிற்கு விசாரணை அதிகாரி கள் வந்ததாகவும் அந்த அறிக்கை சொல்கிறது.

