நஜிப் மனைவி மீது விரைவில் குற்றச்சாட்டு

நஜிப் மனைவி மீது விரைவில் குற்றச்சாட்டு

1 mins read
58e57295-7f43-4aac-8398-e64368f746fb
-

மலேசியாவின் 1எம்டிபி விவகாரம் தொடர்பில் கள்ளப் பணத்தை நல்ல பணம் மாற்றிய குற்றத்திற்­காக அந்நாட்டின் முன்னாள் பிர­தமர் நஜிப் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சூர் (படம்) மீது குற்றஞ்சாட்டப்படும் என எதிர்­பார்க்­கப்படுகிறது. விரைவில் அவர் மீது 20 குற்றச்சாட்டுகள் வரை சுமத்தப்­படக்கூடும் என்று அந்நாட்டு 'நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழ் தெரிவித்துள்ளது. மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் திருமதி ரோஸ்மாவிடம் தீவிரமாக விசா­ரணை மேற்கொண்டனர். 1எம்டிபி­ யின் முந்தைய கிளை நிறுவனமான 'எஸ்­ஆர்சி இன்டர்நேஷனல்' தொடர்­பில் அந்த விசாரணை மேற்­கொள்ளப்­பட்டிருந்தது. கள்ளப் பணத்தை நல்ல பண­மாக்கிய அதே குற்றத்திற்காக திரு நஜிப் மீது கடந்த மாதம் குற்றஞ்சாட்டப்பட்டது. எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் நிறுவனத்தில் இருந்து அவரது சொந்த வங்கிக் கணக்கிற்கு 42 மில்லியன் ரிங்கிட் (S$14 மில்லியன்) மாற்றிவிடப்பட்டு இருந்தது. இதன் தொடர்பில் குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்த திரு நஜிப், பின்னர் பிணையில் விடுவிக்கப்­பட்டார். இவ்வாண்டு மே மாதம் நஜிப்பின் பத்தாண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்த நிலையில், அவரும் திருமதி ரோஸ்மாவும் மலேசியாவைவிட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டது.