சீனப் பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதல் வரிவிதிப்பு

2 mins read
c3bec843-fee5-4b42-ac2c-354d44f3478e
-

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், 200 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சீனப் பொருட்கள் மீது 10 விழுக்காடு கூடுதல் வரி விதித்துள்ளார். அடுத்த வாரத்திலிருந்து நடப்­புக்கு வரும் இந்த நடவடிக்கையின் மூலம் அமெரிக்காவுக்கும் சீனா­வுக்கும் இடையே நடந்துகொண்டு இருக்கும் வர்த்தகப் போரை அமெ­ரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட 6,000 பொருள்கள் மீது இந்தக் கூடுதல் இறக்குமதி வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. கைப்பைகள், அரிசி, துணி­மணிகள், மெத்தைகள் போன்றவை கூடுதல் வரிவிதிப்புக்கு இலக்காகி உள்ளன. ஆனால், கூடுதல் வரி­விதிப்­புக்கு உள்ளாகும் என்று எதிர்­பார்க்கப்பட்ட 'ஆப்பிள்வாட்ச்' போன்ற தொழில்நுட்பப் பயனீட்­டாளர் சாதனங்கள் கூடுதல் வரி­ யிலிருந்து தப்பியுள்ளன. அமெரிக்கா இதுபோன்ற கூடு­தல் வரிகளை விதித்தால் தானும் பதில் நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக சீனா முன்னதாக கூறி இருந்தது.

இந்தப் புதிய வரிவிதிப்பு இம்மாதம் 24ஆம் தேதி முதல் நடப்புக்கு வரும். தற்போது இது 10 விழுக்காடு என்ற அள­வில் இருக்கும். இரு நாடு­களுக்கும் இடையில் உடன்பாடு ஏதும் எட்டப்படாவிடில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வரி 25 விழுக்காடாக உயரக்கூடும். "முறையற்ற வணிக நடை­முறைகளில் ஈடுபடுவதை நிறுத்­ திக்கொண்டு அமெரிக்க நிறுவ­னங்­களிடம் சீனா நியாயமாக நடக்க வேண்டும் என நாங்கள் மாதக் கணக்காக வலியுறுத்தி வருகி­றோம்," என்று டிரம்ப் கூறினார். "என்னென்ன மாற்றங்­களைச் செய்யவேண்டும் என்­ பது குறித்து நாங்கள் மிகத் தெளிவாக இருக்கிறோம். எங்­களை முறையாக நடத்துவதற்­ கான எல்லா வாய்ப்புகளையும் சீனாவுக்கு வழங்குகிறோம். ஆனால், இதுவரை தனது நடைமுறைகளை மாற்றிக்­கொள்ள சீனா விரும்பவில்லை," என்றார் அவர். இதற்குப் பதில டியாகவே இந்தப் புதிய வரிகள் விதிக்கப்­பட்டிருப்பதாக டிரம்ப் கூறினார். "இந்த நடவடிக்­கைக்கு சீனா பதிலடி கொடுத்­ தால், உடனடியாக அமெரிக்கா மூன்­றாம் கட்ட வரிவிதிப்பு நடவடிக்­கைகளில் ஈடுபடும்," என்றும் டிரம்ப் கூறியுள்­ளார்.