மலேசியாவின் சிலாங்கூரில் சில வகை மதுபானங்களை அருந்திய ஆடவர்களில் 15 பேர் உயிர் இழந்துள்ளனர்; மேலும் 33 பேர் மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அருந்திய மதுபானங்களில் நஞ்சு கலக்கப்பட்டிருக் கலாம் எனச் சந்தேகிப்பதாக மலேசிய போலிசார் தெரிவித்தனர். மாண்டவர்களில் மலேசியர்களும் வெளிநாட்டவர்களும் அடங்குவர். 'மண்டலே விஸ்கி', 'கிங்ஃபிஷர் பீர்', 'கிராண்ட் ராயல் விஸ்கி' ஆகிய மதுபானங்களை அருந்தியதாகப் பாதிக்கப்பட்டவர்கள் கூறினர் என்று 'தி ஸ்டார்' செய்தி தெரிவிக்கிறது. சிலாங்கூரின் கிள்ளான் பள் ளத்தாக்குப் பகுதியில் உள்ள பல்வேறு மதுக்கடைகளில் அந்த மதுபானங்களை அவர்கள் வாங்கி யதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்டதாகவும் அவர்கள் சுங்கை புலோ, கோம்பாக், காஜாங், கிள்ளான், ஷா அலாம் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவ தாகவும் சிலாங்கூர் போலிஸ் தலைவர் மஸ்லான் மன்சூர் தெரி வித்தார். "முழுமையான உடற்கூறு ஆய்வு அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம். இந்த உயிரிழப்புச் சம்பவங்கள் 'திடீர் மரணங் கள்' என வகைப்படுத்தப்பட்டு உள்ளன," என்றார் திரு மஸ்லான்.
மலேசியா: மது அருந்திய 15 பேர் பலி; 33 பேர் மருத்துவமனையில்
1 mins read

