அச்சுறுத்தும் வெள்ளம்

அச்சுறுத்தும் வெள்ளம்

1 mins read
Google News Preferred Icon

வில்மிங்டன்: ஃபுளோ ரென்ஸ் சூறாவளி வடக்கு கெரோலினாவில் உரு வாக்கிவிட்ட வெள்ளம் அபாயகரமாக உருவெடுத்து வருகிறது. அதனால் வடக்கு கெரோலினா மக்க ளின் அச்சம் அதிகரித்து வருகிறது. சூறாவளிக்கு இது வரை 32 பேர் பலி யாகிவிட்டனர். அவர்களில் 25 பேர் வடக்கு கெரோ லினாவைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில் வெள்ளத்தின் மட்டம் சில இடங்களில் கட்டட உச்சியைத் தொடுமளவுக்கு அதிகரித்து வருகிறது. நெடுஞ்சாலை கள் ஆறுகளைப்போல காட்சியளிக்கின்றன. வார இறுதியிலும் அடுத்த வாரத்திலும் வெள்ள அபாயம் நீடிக்கும் என்று தேசிய வானிலைச் சேவை நிலையம் தெரி வித்துள்ளது.