இயல்பு நிலைக்குத் திரும்புகிறது ஹாங்காங்

2 mins read
718085ab-b01a-4bee-9856-3d744662a7b3
-

ஹாங்காங்: மங்குட் புயல் நகர்ந் துவிட்ட வேளையில் அது ஏற்படுத் திய பாதிப்புகளைச் சீர்செய்யும் பணிகளில் ஹாங்காங் மக்கள் ஈடுபட்டு உள்ளனர். இந்த மாபெரும் சீரமைப்புப் பணிகளுக்காக ஆசிரியர்கள், பள்ளிக் குழந்தைகளோடு அலு வலக ஊழியர்களும் தஞ்சம் புகுந் துள்ள அகதிகளும் வேறிடங் களுக்கு மாற்றப்பட்டனர். வடக்கு பிலிப்பீன்ஸில் உரு வான மங்குட் புயல் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹாங்காங்கைத் தாக்கியது. உயிர்ச்சேதம் ஏற்படாத போதிலும் 300க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். ஏராளமான கட்டடங்கள் கடு மையாகச் சேதமடைந்தன. அவற் றின் சன்னல்கள் நொறுங்கின. ஆயிரத்துக்கு மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. கடலில் பேர லைகள் எழுந்தன. நேற்றுக் காலையில் நகர் முழுவதும் சேதமடைந்த பொருட் களும் இடிபாடுகளும் நிரம்பிக் கிடந்தன.

குறிப்பாக, கடும் சீற்றத்துடன் வீசிய காற்றாலும் ராட்சத அலை களாலும் கடலோரப் பகுதிகள் சிதைந்தன. பாதைகளும் சாலை களும் உருக்குலைந்தன. அகதிகளாக ஹாங்காங்கில் தங்கி உள்ள ஏராளமான ஆப் பிரிக்கக் குடிமக்களும் அடைக் கலம் நாடுவோரும் வீதிகளிலும் சாலையிலும் விழுந்த கிடந்த மரக் கிளைகளை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு இருப்பதைக் காட்டும் காணொளிகள் ஃபேஸ் புக்கில் வலம் வந்தன. கடுமையான சீரமைப்புப் பணி களில் ஈடுபட்டு இருக்கும் துப்புர வாளர்களுக்கு இவர்களின் ஈடு பாடு பேருதவியாக அமைந்தது எனக் கூறப்பட்டது. இதற்கிடையே, பிலிப்பீன்ஸிலும் சீனாவிலும் மங்குட் புயலுக்குப் பலியானோரின் எண்ணிக்கை 74க்கு அதிகரித்துவிட்டது. பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

சாலைகளின் குறுக்கே விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றும் பணி. படம்: அகதிகள் மையம்