நவாஸ் ஷரிஃப், மகள், மருமகன் விடுதலை

நவாஸ் ஷரிஃப், மகள், மருமகன் விடுதலை

1 mins read
a9d2b8eb-0d57-4069-a3e3-60477ecf1982
-

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னா ள் பிரதமர் நவாஸ் ஷரிஃப், அவரது மகள் மர்யம், மருமகன் சஃப்தார் அவான் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்ட னையை இஸ்லா மாபாத் உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்து உள்ளது. மேலும் அவர் களை விடுவிக்க அது உத்தர விட்டு உள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் தங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சிறைத் தண்டனையை எதிர்த்து நவாஸ் ஷரிஃபும் மர்யமும் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத் தில் மேல்முறையீடு செய்திருந்த னர்.

இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் நீதிபதிகள் அத்தார் மினால்லா, மியான்குல் ஹசன் அவுரங்கசீப் ஆகியோர் கேட்டறிந்தனர். பாகிஸ்தானில் மூன்று முறை பிரதமராகப் பதவி வகித்தவர் நவாஸ் ஷரிஃப். லண்டனில் அவேன்ஃபீல்ட் பகுதியில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கியதாக இவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. பாகிஸ்தான் லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இருப்பினும், குடியிருப்புகளுக்கு இவர் உரிமை கோரியதன் தொடர் பில் குறிப்பிடத்தக்க ஆதாரம் எதுவு ம் தென்படவில்லை என்று நீதிபதி அத்தார் கூறி மூவரையும் விடு விக்குமாறு அதிரடியாக உத்தர விட்டார்.

நவாஸ் ஷரிஃப், அவரது மகள் மர்யம். ராய்ட்டர்ஸ் கோப்புப் படம்