கூடுதல் வரிவிதிப்பின் மூலம் பதிலடி தந்த சீனா

கூடுதல் வரிவிதிப்பின் மூலம் பதிலடி தந்த சீனா

2 mins read

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 200 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப் பிலான பொருட்கள் மீது நேற்று முன்தினம் 10 விழுக்காடு வரி விதித்திருந்தார். அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, 60 பில்லியன் அமெரிக்க டாலர் (S$82.3 பில்லியன்) மதிப் பிலான அமெரிக்க இறக்குமதிப் பொருட்களுக்கு சீனா வரி விதித்துள்ளது. இந்த புதிய வரிகள் அடுத்த வாரம் நடப்புக்கு வரும் என்று சீன நிதி அமைச்சு நேற்று முன் தினம் பின்னேரத்தில் தெரிவித்தது.

அமெரிக்கா விதித்த வரி களும் அடுத்த வாரம்தான் நடப்பு க்கு வரும் என்று தெரிவிக்கப் பட்டு இருந்தது. டிரம்புக்கு அரசியல் ஆதரவு உள்ள மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயு உள்ளிட்ட பொருட்கள் இந்த வரி விதிப்பு பட்டியலில் அடங்கும். அமெரிக்கா இதுபோன்ற கூடுதல் வரிகளை விதித்தால் தானும் பதில் நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக சீனா முன்ன தாக எச்சரித்திருந்தது. சீனா விதித்துள்ள இந்தப் புதிய வரிகள் 5 மற்றும் 10 விழுக்காடாக அமையும் எனத் தெரிவிக்கப்ப ட்டது.

இதற்கிடையே, அமெரிக்காவில் நடைபெறும் இடைத்தேர்தல்களில் சீனா தாக்கம் செலுத்த முயற்சி செய்வதற்கு எதிராக டிரம்ப் டுவிட்டரில் எச்சரித்துள்ளார். அமெரிக்காவுடன் 20 ஆண்டு கள் வர்த்தகப் போருக்குச் சீனா தயாராகி வருவதால், இந்த மோதல் தீருவதற்கு இப்போ தைக்கு வாய்ப்பில்லை என சீனா வின் இணைய வர்த்தக நிறுவனமா ன அலிபாபாவின் நிறுவனர் ஜாக் மா கூறியுள்ளார். அமெரிக் காவின் இந்த வரி விதிப்பினால் சீனாவின் அலிபாபா வுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.