பியோங்யாங்: வடகொரியாவில் உள்ள குறிப்பிட்ட அணுவாயுத மற்றும் ஏவுகணைச் சோதனை தளங்களை நிரந்தரமாக மூடுவ தற்கு அந்நாடு சம்மதம் தெரிவித்து உள்ளதாக தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் கூறியுள்ளார். வடகொரியத் தலைநகர் பியோங்யாங்கிற்கு மூன்று நாள் அதிகாரத்துவப் பயணம் மேற் கொண்டிருக்கும் திரு மூன், கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதக் களைவு விவகாரம் குறித்து வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர் இருவரும் கூட்டாக நேற்று செய்தி யாளர்களைச் சந்தித்தபோது திரு மூன் இதனைத் தெரிவித்தார்.
"வடகொரியா அதன் முக்கிய அணுவாயுத ஏவுகணைச் சோதனை தளங்களை வெளிநாட்டு நிபுணர்கள் முன்னிலையில் நிரந்தரமாக மூட ஓப்புக்கொண்டுள்ளது. அணுவாயுதங்கள் மற்றும் அணுசக்தி இல்லாத அமைதியான பகுதியாக கொரிய தீபகற்பம் மாற வடகொரியா சம்மதம் தெரிவித்து உள்ளது," என்றார் திரு மூன்.
மேலும், அமெரிக்காவின் பரஸ் பர நடவடிக்கைகளின் அடிப்படை யில் மீதமுள்ள அணுவாயுத சோதனை தளங்களை முற்றிலும் மூட வடகொரியா சம்மதம் தெரி வித்துள்ளது என்றார் அவர். திரு மூனின் அழைப்பை ஏற்று இவ்வாண்டின் இறுதிக்குள் தாம் தென்கொரியத் தலைநகர் சோலுக்கு செல்லவிருப்பதாக திரு கிம் தெரிவித்தார். இரு கொரியத் தலைவர்களும் வெளியிட்ட இந்த அறிவிப்பை வெகுவாகப் பாராட்டினார் அமெ ரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்.
பியோங்யாங்கில் நேற்று நடைபெற்ற உச்சநிலை சந்திப்பைத் தொடர்ந்து தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னும் (இடது) வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும், அணுவாயுதக் களைவு விவகாரம் தொடர்பில் கையெழுத்தான உடன்பாடுகளைக் செய்தியாளர்களிடம் காட்டினர். படம்: ஏஎஃப்பி

