அம்னோவில் இருந்து விலகிய அனிஃபா அமான்

அம்னோவில் இருந்து விலகிய அனிஃபா அமான்

1 mins read
Google News Preferred Icon

கோத்தா கினபாலு: மலேசிய முன்னாள் வெளியுறவு அமைச்சர் அனிஃபா அமான் அம்னோ கட்சியிலிருந்து விலகியுள்ளார். மலேசிய கூட்டமைப்பில் சாபாவையும் சரவாக்கையும் சமநிலை மாநிலங்களாக இணைப்பதன் தொடர்பில் மலேசிய அரசாங்கம் எடுத்துள்ள முடிவைத் தாம் ஆதரிப்ப தாகவும் இனி நாடாளுமன் றத்தில் தாம் நடுநிலையுடன் விவாதிக்கப் போவதாகவும் சாபாவின் கிமனிஸ் தொகுதி நாடளுமன்ற உறுப்பினரான திரு அனிஃபா கூறினார். "நான் இதை சாபாவுக்காக செய்கிறேன். நான் தொடர்ந்து அம்னோவில் இருந்தால் கட்சி கொரடாவின் நடவடிக்கைக்கு உட்பட வேண்டியிருப்பதால் அரசாங்கம் நிறைவேற்றும் மசோதாவுக்கு எதிராக நான் வாக்களிக்க இயலாது," என்றார் அவர்.