அக்டோபர் 13ல் போர்ட் டிக்சன் இடைத்தேர்தல்

அக்டோபர் 13ல் போர்ட் டிக்சன் இடைத்தேர்தல்

1 mins read
Google News Preferred Icon

கோலாலம்பூர்: போர்ட் டிக்சன் நகருக்கான இடைத்தேர்தல், அக்டோபர் 13ஆம் தேதி நடைபெறும் என்று மலேசியாவின் தேர்தல் ஆணையம் அறிவித்தி ருக்கிறது. கெஅடிலான் ராக்யாட் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அன்வார் இப்ராகிம், போர்ட் டிக்சனுக்கான நாடாளுமன்ற இடத்திற்குப் போட்டியிடுவார். நாடாளுமன்றத்திற்கு திரு அன்வார் திரும்புவதற்காக தனது இடத்தை விட்டுக்கொடுப்பதாக முன்னைய நாடாளுமன்ற உறுப்பினர் டன்யால் பாலகோபால் அப்துல்லா கூறினார். இந்தத் தேர்தலில் திரு அன்வார் வெற்றியடைந்தால் அவர் நாடாளுமன்ற சீர்திருத்தங்களின் மீது கவனம் செலுத்தப்போவதாக அவரது கட்சி தெரிவித்தது.