கோலாலம்பூர்: பக்கத்தான் ஹரப்பான், தனது தேர்தல் அறிக்கையிலுள்ள சட்டத் திருத்தங்களை செயல்படுத்த 10 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று மலேசியாவின் தலை மைச் சட்ட அதிகாரி தாமி தோமஸ் தெரிவித்திருக்கிறார். சட்டத் திருத்தங்கள் குறித்த பக்கத்தான் ஹரப்பானின் உறுதிமொழியைத் தலைமைச் சட்ட அலுவலகம், பட்டியலாகத் தொகுத்துள்ளது. இந்த பட்டியல் ஒன்பது பக்கங்கள் வரை இருப்பதாக திரு தோமஸ் தெரிவித்தார். இத்தனை சட்டங்களுக்கு மாற்றங்கள் செய்வது எளிதல்ல என்றும் அவர் கூறினார்.
ஆயினும், அடக்குமுறைத் தனம் வாய்ந்த சட்டங்களை, ஒரு கூட்டணியின் தலைமை யிலான அரசாங்கம் 60 ஆண் டுகளாக அமல்படுத்தியதைத் திருத்துவதற்கான முயற்சியில் புதிய அரசாங்கம் ஈடு படுவதாக அவர் கூறினார். எனவே, சீர்திருத்தத்தின் வேகத்தை அதிகரிக்க, பல் வேறு அமைச்சர்களும் பங்கா ளிகளும் இதில் அதிக முனைப்புடன் ஈடுபட திரு தோமஸ் கேட்டுக் கொண்டார். இருந்தபோதும் இந்தத் திருத்தங்களை அவசரமாகச் செய்வது நல்லதல்ல என்று அவர் கூறினார். இவற்றைச் செய்ய நீண்ட காலம் ஆகலாம் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம் என்று கூறினார். பல்வேறு குழுக்களுடன் கலந்து ஆலோசித்து பின்னர் திருத் தங்கள் ஒவ்வொன்றாக செய் யப்படுமென்று அவர் கூறினார். திருத்தங்களே தேவைப் படாத சட்டத்தை உருவாக்குவது முடியாத ஒன்று என்றாலும் சட்டத்திருத்த முறையில் எல்லோரும் கலந்துகொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

