சோல்: வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பை மீண்டும் சந்திக்க வேண்டுமென கேட்டுக் கொண்டதாக தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் தெரிவித்திருக்கிறார். தமது மூன்று நாள் வட கொரிய பயணத்தை நிறைவு செய்துள்ள திரு மூன், தமது சொந்த நாட்டுக்குத் திரும்பிய போது இதனைத் தெரிவித்தார். "அணுவாயுதக் களைவை விரைவில் முடித்து பொருளியல் மேம்பாட்டில் தாம் கவனம் செலுத்த விரும்புவதாக கிம் ஜோங் உன் கூறினார். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ வட கொரியாவுக்கு வருகை அளிக்க திரு கிம் விரும்புகிறார்,"என்று அவர் கூறினார். திரு டிரம்ப்பும் திரு கிம்மும் இவ்வாண்டு ஜூன் மாதத்தில் சிங்கப்பூரில் சந்தித் தனர். ஐக்கிய நாட்டுப் பொதுக் கூட்டத்தில் அடுத்த வாரம் திரு டிரம்ப்பைச் சந்திப்பதாகக் கூறும் திரு மூன், திரு கிம்மிடமிருந்து ரகசியமான கடிதம் ஒன்றை திரு டிரம்ப்புக்குக் கொடுக்கவுள்ளதா கவும் அவர் கூறினார்.
மூன்: டிரம்ப்-பை மீண்டும் சந்திக்க கிம் விருப்பம்
1 mins read

