சவூதி பெண்ணுக்குக் கடப்பிதழ் அனுமதி

சவூதி பெண்ணுக்குக் கடப்பிதழ் அனுமதி

1 mins read
Google News Preferred Icon

ரியாத்: கடப்பிதழ் வைத்திருக்கத் தந்தை தடை விதித்தபோதும் அதனை எதிர்த்து வழக்குத் தொடுத்த சவூதி அரேபியப் பெண்ணுக்குச் சாதகமாக அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது. வெளியே செல்வது, திருமணம் செய்வது உள்ளிட்ட பலவற்றைச் செய்ய பெண்கள், சவூதியில் தங்களது ஆண் 'காப்பாளர்களிடம்' அனுமதியைப் பெறவேண்டும். அந்த ஆண் காப்பாளர்கள், பெண்களின் தந்தையாகவோ, கணவராகவோ அல்லது உறவினராகவோ இருக்கவேண்டும். இந்த வழக்கின் முடிவு, பெண்களின் காப்பாளர்கள் குறித்த விவாதத்தை அந்நாட்டில் மீண்டும் எழுப்பியுள்ளது.