அன்வார்: தேர்தலில் நான் வென்றால் நாடாளுமன்றம் திறம்படச் செயலாற்றும்

1 mins read

பிணைத்தொகையில் ஒரு மில்லியன் ரிங்கிட்டைச் செலுத்தினார் நஜிப் உடற்பாகங்களை திருப்பிக் கொடுத்த வடகொரியா; பெயர்கள் வெளியீடு வியட்னாமிய அதிபர் காலமானார் பெட்டாலிங் ஜெயா: போர்ட்டிக்சன் நகரின் இடைத்தேர்தலில் தாம் வெற்றி பெற்றால் மலேசிய நாடாளுமன்றத்தை உண்மையான செயல்திறனுடன் இயங்க வைக்கப்போவதாக கெஅடிலான் ரக்யாட் கட்சியின் தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மதிற்கு தாம் முழுமையாக ஆதரவைத் தருவதாக அவரிடம் தெரிவித்ததை திரு அன்வார், தமது கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். தமக்கும் திரு மகாதீருக்கும் இடையில் வேறுபாடுகள் எழுந்துள்ளதாகக் கூறும் தகவல்களையும் அவர் மறுத்துள்ளார். இதற்கிடையே வழக்கறிஞர் அஸார் ஹரூன், மலேசியத் தேர்தல் ஆணையத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.