டான்சானியா: படகு கவிழ்ந்து 100 பேர் பலி

டான்சானியா: படகு கவிழ்ந்து 100 பேர் பலி

1 mins read

ரியாத்: கடப்பிதழ் வைத்திருக்கத் தந்தை தடை விதித்தபோதும் அதனை எதிர்த்து வழக்குத் தொடுத்த சவூதி அரேபியப் பெண்ணுக்குச் சாதகமாக அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது. வெளியே செல்வது, திருமணம் செய்வது உள்ளிட்ட பலவற்றைச் செய்ய பெண்கள், சவூதியில் தங்களது ஆண் 'காப்பாளர்களிடம்' அனுமதியைப் பெறவேண்டும். அந்த ஆண் காப்பாளர்கள், பெண்களின் தந்தையாகவோ, கணவராகவோ அல்லது உறவினராகவோ இருக்கவேண்டும். இந்த வழக்கின் முடிவு, பெண்களின் காப்பாளர்கள் குறித்த விவாதத்தை அந்நாட்டில் மீண்டும் எழுப்பியுள்ளது.

டாரே சலாம்: டான்சானியா நாட்டில் விக்டோரியா ஏரியில் சென்றுகொண்டிருந்த பயணப் படகு திடீரென கவிழ்ந்ததைத் தொடர்ந்து பலர் நீரில் மூழ்கி பலியாகினர். அவர்களில் இது வரை 1-00 பேரின் இறந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் பலரைக் காணவில்லை. அந்தப் படகில் கிட்டத்தட்ட 300 பேர் பயணம் செய்ததாகக் கூறப் படுகிறது. அவர்களில் 37 பேர் காப்பாற்றப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர்.