பிணைத்தொகையில் ஒரு மில்லியன் ரிங்கிட்டைச் செலுத்தினார் நஜிப்

பிணைத்தொகையில் ஒரு மில்லியன் ரிங்கிட்டைச் செலுத்தினார் நஜிப்

1 mins read

கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னைய பிரதமர் நஜிப் ரசாக், தமக்கான 3.5 மில்லியன் -ரிங்கிட் பிணைத் தொகையில் 1 மில்லியன் ரிங்கிட்டைச் செலுத்தியுள்ளார். 2.3 மில்லியன் -ரிங்கிட் பணம் தொடர்பான 25 ஊழல் மற்றும் கள்ளப்பணத்தை நல்ல பணமாக்கும் குற்றச்சாட்டுகளை கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றம் திரு நஜிப் மீது சுமத்தியது. பிணைத்தொகை கட்டம் கட்டமாகச் செலுத்தப்படும் என்று திரு நஜிப்பின் வழக்கறிஞர் முகம்மது ஷஃபி அப்துல்லா தெரிவித்தார். அடுத்த வாரம் மேலும் 500,000 ரிங்கிட் செலுத்தப்படும் என்று அவர் கூறினார். திரு நஜிப் தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்து வருகிறார். ஆயினும், திரு நஜிப் நீதிமன்ற வழக்குகளில் தலையிடும் குணத்தைக் கொண்டவர் என்று அவருக்கு எதிராக வாதிடும் அரசாங்க வழக்கறிஞர்களுக்கு தலைமை தாங்கும் ஓய்வுபெற்ற நீதிபதி கோபால் ஸ்ரீராம் தெரிவித்தார்.