கோலாலம்பூர் விமான நிலையத்தில் உடலைச் சோதிக்கும் முறை நீக்கப்படுகிறது

கோலாலம்பூர் விமான நிலையத்தில் உடலைச் சோதிக்கும் முறை நீக்கப்படுகிறது

1 mins read

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அடுத்த ஆண்டு பிற்பாதியிலிருந்து விமானப் பயணி களிடம் பாதுகாப்பு அதிகாரிகள் நடத்தும் உடல்சோதனை இடம் பெறாது என்று அறிவிக்கப்பட்டுள் ளது. கோலாலம்பூர் இரண்டாவது அனைத்துலக விமான நிலையத் திலும் உடல்சோதனை முறை அகற்றப்படக்கூடும் புதிய, மேம்படுத்தப்பட்ட ஊடு கதிர் இயந்திர வருடிகள் பயன் பாட்டுக்கு வரும்போது உடல் சோதனை நிறுத்தப்படும் என்று மலேசிய போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறியுள்ளார். மலேசிய விமான நிலைய நிறுவனம் (MAHB) புதிய சாதனங்களை நிறுவும் என்றும் அவர் கூறினார். அநேகமாக அடுத்த ஆண்டு பிற்பாதியில் இது நடப்புக்கு வரும் என்றும் அதன் பின்னர் விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகள் விமானப் பயணிகளின் உடலில் நடத்தப்படும் சோதனை நிறுத்தப் படும் என்றும் அவர் செய்தியாளர் களிடம் தெரிவித்தார்.

"உடலில் சோதனை நடத்துவது பெரும்பாலான விமானப் பயணி களுக்கு அசௌகரியமாக இருக் கும். ஆயினும் பாதுகாப்புக்காக அந்த நடைமுறை கட்டாயமாக இடம்பெறுகிறது. "நான் அமைச்சராக இருப்பினும் விமான நிலைய பாதுகாப்புச் சோதனை வாயிலைக் கடக்கும் போது எனது உடலையும் சோதனை செய்வார்கள். இதற்கு முடிவுகட்டும் வகையில், விமான நிலையச் சேவையில் மேம்படுத்தப்பட்ட புதிய இயந்திரங்களும் புதிய வசதிகளும் இடம்பெறும்," என்றார் திரு லோக்.