ஹாங்காங்: ஹாங்காங்கின் சர்ச் சைக்கு இடமான புல்லட் ரயில் நேற்று சரளமாக சேவையைத் தொடங்கியது. நூற்றுக்கணக்கான பயணிகள் அந்த ரயிலில் ஏறி 200 கி.மீ. வேகத்தில் எல்லையைக் கடந்து சீனாவுக்குள் சென்றனர். அந்த ரயில், ஹாங்காங்கும் சீனாவும் வேகமாக ஒருங்கிணை வதற்கு அறிகுறியாகக் கருதப்பட் டது. மொத்தம் US$11 பில்லியன் (S$15 பில்லியன்) செலவில் உரு வாக்கப்பட்டு இருக்கும் அந்த ரயில் திட்டம் சிலரிடையே கவலை ஏற்படுத்தி இருக்கிறது. சீனாவின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட ஹாங்காங்கின் சுதந்திரத் தில் பெய்ஜிங் கைவைக்கிறது என்று அவர்கள் கவலைப்படு கிறார்கள். இருந்தாலும் ஹாங்காங் கிலிருந்து சீனாவுக்கு 20 நிமிடங் களுக்குள் செல்வதை சாத்தியமாக் கும் புதிய ரயில் திட்டத்தை நேற்று பலரும் வரவேற்றனர். ஹாங்காங்கில் இருக்கும் புல்லட் ரயில் நிலையத்தின் ஒரு பகுதியில் சீனாவின் குடிநுழைவு அதிகாரிகள் நிறுத்தப்பட்டு உள்ள னர். அந்தப் பகுதி சீன சட்ட திட் டங்களுக்கு உட்பட்டதாக இருக் கிறது. இத்தகைய ஒரு பகுதி இதுவரை ஹாங்காங்கில் இல்லை.
இப்போது இந்த ஏற்பாடு நடப்புக்கு வந்திருப்பதால் ஹாங் காங்கின் தன்னாட்சி சுதந்திரம் மேலும் பாதிக்கப்படுவதாக சிலர் குறைகூறுகிறார்கள். ஹாங்காங்கை சீனாவின் பேர்ல் ஆற்றுப் படுகையுடன் இணைக்க பரந்த அளவிலான ஒரு முயற்சியை சீனா மேற்கொண்டு வருகிறது. அந்த முயற்சியின் ஒரு பகுதி யாக புல்லட் ரயில் திட்டம் அமைக்கப்பட்டு இருக்கிறது. சீனாவின் பேர்ல் ஆற்றுப் படுகையில் ஒன்பது நகரங்கள் அமைந்திருக்கின்றன.

