ஈரான் சூளுரை: தாக்கியோரை நசுக்கி அழிக்கப்போகிறோம்

ஈரான் சூளுரை: தாக்கியோரை நசுக்கி அழிக்கப்போகிறோம்

1 mins read
2db577af-f751-45a8-89e0-e2ad7eb71ba9
-

தெஹ்ரான்: ஈரானில் ஈராக் எல்லை அருகே உள்ள குசெஸ் தான் என்ற மாநிலத்தில் இருக்கும் அவாஸ் என்ற நகரில் சனிக்கிழமை நடந்த ராணுவ அணிவகுப்பு ஒன் றில் துப்பாக்கிக்காரர்கள் புகுந்து கூட்டத்தினரைக் கண்டபடி சுட்டு சிறார்கள், மாதர்கள் உட்பட 29 பேரைக் கொன்றுவிட்டார்கள். இதர 60 பேர் காயம் அடைந்தனர். இந்தச் சம்பவத்தை அடுத்து அத்தகைய தாக்குதல் நடத்தி யோரை நசுக்கி துடைத்தொழிக்கப் போவதாக ஈரானிய அதிபர் ஹசான் ருஹானி சூளுரைத்தார்.

அவாஸ் நகரில் அரங்கேற்றப் பட்ட தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டு உள்ளது. அமெரிக்க ஆதரவு பெற்ற வெளிநாட்டு சக்தி அந்தப் பயங்கரவாத சம்பவத்திற்குக் காரணம் என்று ஈரானிய அதிகாரி கள் குற்றம் சுமத்தி உள்ளனர்.

அவாஸ் நகரில் நடந்த ராணுவ அணிவகுப்பின் போது அரங்கேற்றப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் இருந்து ஒரு குடும்பத்தைக் காப்பாற்றும் ஈரானிய படைவீரர். படம்: இபிஏ