சிட்னி: கோல்டன் குளோப் உலகம் சுற்றும் பந்தயத்தில் பங்கேற்று கடுமையாகக் காயம் அடைந்துவிட்ட இந்திய கடலோடியான அபிலாஷ் டோமியை, 39, மீட்க இடம்பெற்று வரும் அனைத்துலக முயற்சியில் நேற்று ஆஸ்திரேலியாவும் சேர்ந்தது. இந்திய கடற்படை தளபதியான டோமி யின் பாய்மரப் படகு வெள்ளிக்கிழமை புயலில் சிக்கி பாதிக்கப்பட்டது. அதில் அவர் கடுமையாகக் காயம் அடைந்துவிட்டார். விபத்து ஆஸ்திரேலியா வின் மேற்குக் கோடி மாநிலத்தில் இருந்து சுமார் 3,704 கி.மீ. தொலைவில் நிகழ்ந்த தாக பந்தய ஏற்பாட்டாளர்கள் கூறினர்.
அந்தப் பாய்மரப் படகு மிதக்கும் இடத் திற்கு உயரே ஆஸ்திரேலிய அரசு விமானப் படை விமானங்களும் இந்திய ஆயுதப்படை விமானம் ஒன்றும் பறந்து அந்தப் படகைக் கண்ணோட்டமிட்டன. டோமியை இன்று அல்லது நாளை எப்படியும் மீட்புப் படையினர் எட்டிவிடுவர் என்று நம்பப்படுகிறது. அவரை நோக்கி பிரான்சின் மீன்பிடி கலம் ஒன்று வேகமாக நெருங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

