இரண்டு பேரைத் தாக்கிய சுறா மீன்களை ஆஸ்திரேலியா கொன்றது

இரண்டு பேரைத் தாக்கிய சுறா மீன்களை ஆஸ்திரேலியா கொன்றது

1 mins read

சிட்னி: ஆஸ்திரேலியாவில் பிரபலமான சுற்றுலா இடமான கிரேட் பாரியர் ரீஃப் கடற்பகுதியில் மாது ஒருவரும் 12 வயது சிறுமி ஒருவரும் தாக்கப்பட்டதை அடுத்து இரண்டு பெரிய சுறா மீன்கள் கொல்லப்பட்டுவிட்டன. சுறா மீன்கள் தாக்கிய இருவரும் இன்னமும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். அவர்களை விட்சண்டே ஐலண்ட்ஸ் என்ற இடத்தில் சென்ற வாரத் தொடக்கத்தில் தனித்தனியான சம்பவங்களில் சுறா மீன்கள் தாக்கி கடித்துவிட்டன.