அன்வார்: நாற்காலி வீசினால் கட்சியிலிருந்து நீக்குவோம்

அன்வார்: நாற்காலி வீசினால் கட்சியிலிருந்து நீக்குவோம்

2 mins read
57c58b70-b540-4ee1-81ee-163abb9c9033
-

கோத்தா கினபாலு: மலேசியாவில் பிகேஆர் கட்சியின் 2018 தேர்தலின்போது யார் குழப்பத்தை ஏற்படுத்தினாலும் அவர்கள் கட்சியிலிருந்து தூக்கி எறியப் படுவார்கள் என்று அந்தக் கட்சியின் தலைவர் அன்வார் இப்ராஹிம் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். கெடா மாநிலத்தில் சனிக்கிழமை கட்சித் தேர்தல் ஒன்றின்போது நடந்த கைகலப்பு பற்றி கருத்து கூறிய அன்வார், அந்தச் சம்பவம் பற்றி முதலில் புலன் விசாரணை நடத்தப்படும் என்றும் குற்ற வாளிகள் மட்டும் கட்சியிலிருந்து வெளி யேற்றப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். குறிப்பிட்ட உறுப்பினர்கள் கீழறுப்புச் செயல்களில் ஈடுபட்டு அத்தகைய கை கலப்புகளைக் கிளப்பிவிட்டு இருக்கும் சாத்தியத்தை அவர் நிராகரிக்கவில்லை. "நாற்காலிகளைத் தூக்கி வீசுவோரை கட்சியிலிருந்து தூக்கிவீசிவிடுவோம். இருந்தாலும் முதலில் புலன்விசாரணை நடத்துவோம். பிறகுதான் செயலில் இறங்குவோம்," என்றார் அன்வார். கோத்தா கினபாலுவில் ஆய்வரங்கு ஒன்றில் கலந்துகொண்ட அவர் செய்தி யாளர்களிடம் இவ்வாறு கூறினார். இதனிடையே, பிகேஆர் கட்சியின் மெர்போக் கிளையில் நடந்த கட்சித் தேர் தலின்போது கைகலப்பு மூண்டதை அடுத்து 14 பேர் கைதாயினர்.

கோலா மூடா மாவட்ட போலிஸ் தலைவர் உதவி ஆணையர் அட்ஸ்லி அபு ஷா இது பற்றி பல விவரங்களைத் தெரிவித்தார். "இந்த விவகாரம் தொடர்பில் முதலில் நான்கு பேர் கைதானார்கள். அவர்கள் கொடுத்த வாக்குமூலங்களையும் பிரத்தி யேகப் படச்சாதனங்களையும் ஆராய்ந்த பிறகு இதர 10 பேர் கைது செய்யப்பட்டனர். "குற்றவியல் தண்டனைச் சட்டம் பிரிவு 148ன் கீழ் இந்தச் சம்பவம் பற்றி புலன் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது," என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

பிகேஆர் கட்சி கிளை அலுவலகத்தில் நடந்த தேர்தலின்போது இரண்டு குழுவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவர் காயம் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. படம்: நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்