தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டிரம்ப் மிரட்டல்: சீனப் பொருட்களுக்கு மேலும் வரி விதிக்கப்படும்

1 mins read

வா‌ஷிங்டன்: அமெரிக்காவில் இறக்குமதியாகும் US$200 பில்லியன் சீனப் பொருட்களுக்கு வரிவிதிக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்து இருக்கிறது. இதற்குப் பதிலடியாக சீனா ஏதாவது நடவடிக்கை எடுத்தால் சீனப் பொருட்களுக்கு இன்னும் அதிக வரி விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டி இருக்கிறார். வர்த்தகப் பேச்சுவார்த்தையை சீனா ரத்து செய்வதாக தகவல்கள் வெளியான நேரத்தில் அதிபரின் இந்த எச்சரிக்கை இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவுடன் வர்த்தகப் போரில் ஈடுபடுவதற்கு முன்னதாக ஒரு தடவைக்கு இரண்டு தடவை நன்கு யோசித்துக்கொள்ளும்படி சீனாவை அமெரிக்க அதிபர் எச்சரித்தார். "சீனாவில் தயாராகும் பொருட்களுக்கு வரி விதிக்க நாங்கள் முடிவு செய்திருக்கிறோம். இதற்கு ஏதாவது பதிலடி கொடுக்க சீனா முயன்றால் மேலும் வரிகள் வரும்," என்று மிசோரியில் நடந்த பேரணி ஒன்றில் பேசிய அதிபர் டிரம்ப் கடுமையாக எச்சரித்தார்.