ஈரான் அணிவகுப்பில் துப்பாக்கிச்சூடு: சந்தேகப் பேர்வழிகள் பலர் கைது

ஈரான் அணிவகுப்பில் துப்பாக்கிச்சூடு: சந்தேகப் பேர்வழிகள் பலர் கைது

2 mins read

ஈரானில் சென்ற சனிக்கிழமை நடந்த ராணுவ அணிவகுப்பில் 29 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதன் தொடர்பில் ஒரு பெரிய கட்டமைப்பு கைதுசெய்யப்பட்டு இருப்ப தாக அந்த நாட்டின் உளவுத்துறை அமைச்சர் தெரிவித்து இருக்கிறார். பிடிபட்டவர்களில் புரட்சிக் காவலர்கள் அமைப்பைச் சேர்ந்த 12 பேரும் அடங்குவர் என்று அமைச்சர் முகம்மது அலாவி குறிப் பிட்டார்.

ஈரானைத் தனிமைப்படுத்துவதற்காக அமெரிக்காவும் அதனுடைய வளைகுடா நட்பு நாடுகளும் முயன்றுவரும் நேரத்தில் அந்த நாட்டில் பயங்கரவாத வன்செயல் சம்பவம் அரங்கேற்றப்பட்டது. ஈரானின் ராணுவம் மிகவும் பலம் வாய்ந்தது. அந்த ராணுவத்தை எதிர்த்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் அந்நாட்டில் நிகழ்ந்துள்ள படுமோசமான தாக்குதலில் ஒன்று என்று கருதப்படுகிறது.

"அணிவகுப்புத் தாக்குதலில் தொடர் புள்ள பயங்கரவாதிகள் அனைவரையும் நாங்கள் அடையாளம் காண்போம். "சந்தேகப் பேர்வழிகளைக் கொண்ட ஒரு கட்டமைப்பின் பெரும் பகுதியை ஏற்கெனவே கைதுசெய்துவிட்டோம்," என்று அமைச்சர் அலாவி கூறியதாக மிசான் என்ற செய்தி நிறுவனம் தெரி வித்தது. ஈராக்கை ஒட்டிய எல்லைப்பகுதியில் உள்ள அவாஸ் நகரில் கடந்த சனிக்கிழமை நடந்த ராணுவ அணிவகுப்பின்போது நடத்தப்பட்ட தாக்குதலில் மாண்டோருக் கான இறுதிச் சடங்குகள் நடந்தன.

அதில் கலந்துகொண்டபோது அமைச் சர் இந்த விவரங்களைத் தெரிவித்தார். தாக்குதலில் மரணம் அடைந்தவர் களுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் அவாஸ் நகரில் கூடி அஞ்சலி செலுத்தி னார்கள். ஈரான் நேற்று திங்கட்கிழமையை அஞ்சலி தினமாக அறிவித்தது. குசெஸ்தான் மாநிலத்தில் நேற்று அரசாங்க அலுவலகங்களும் வங்கிகளும் பள்ளிக்கூடங்களும் பல்கலைக்கழகங் களும் மூடப்பட்டு இருந்தன.