ஐயோவா ஆற்றுப்பகுதியில் சரக்கு ரயில் தடம் புரண்டது

2 mins read
ed343019-4ed1-49c4-8110-cced5f50f68b
-

ஐயோவா: அமெரிக்காவின் ஐயோவா மாநி லத்தில் உள்ள அல்ட்டன் நகர் அருகே சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டு விபத் துக்குள்ளானது. இச்சம்பவம் உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் அதிகாலை 4.30 மணியளவில் ஏற்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்பட வில்லை என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். அப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக இடைவிடாது பெய்த கனமழையின் கார ணமாக இந்த விபத்து நிகழ்ந்து இருக்கக்கூ டும் என்று அறியப்படுகிறது. இந்த விபத்தைத் தொடர்ந்து அந்தப் பகுதியின் ஃபுளோய்ட் ஆற்றில் அபாயப் பொருள் எதுவும் கசியவில்லை என்று சியோக்ஸ் கவுண்ட்டி அதிகாரிகள் தெரிவித்தனர்.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கி னால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று யூனியன் பசிபிக் நிறுவன தொடர்புத் துறை மூத்த இயக்கு நரான ரேக்கியல் எஸ்பினோஸா மின்னஞ்சல் வழி தெரிவி த்தார். கனமழையினால் அந்த ஆற்றின் நீர் மட்டம் இதுவரை காணப்படாத அளவிற்கு உயர்ந்ததாக தெரிவிக்கப்பட்டது. அந்தப் பகுதியில் ரயில் செல்லும் பாலத்தின் உய ரத்தை எட்டும் அளவிற்கு நீர்மட்டம் உயர்ந்த து.

விபத்துக்குள்ளான அந்தச் சரக்கு ரயில் சோயா பீன் எண் ணெயையும் தொழிற்சாலை மண லையும் கொண்டு சென்றது. இந்த விபத்தில் ரயிலின் 95 பெட் டிகளில் 37 பெட்டிகள் தடம் புரண்டு சேதமடைந்தன. அவற்றில் 20 பெட்டிகள் ஆற்றில் விழுந்தன. அப்பெட்டி களில் இருந்த தொழிற்சாலை மணலும் ஆற்றில் கொட் டியது.

அமெரிக்காவின் ஐயோவா மாநிலத்தில் உள்ள அல்ட்டன் நகர் அருகே உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் அதிகாலை 4.30 மணியளவில் சரக்கு ரயில் தடம் புரண்டது. இந்த விபத்தில் ரயிலின் 37 பெட்டிகள் கவிழ்ந்தன. அவற்றில் 20 பெட்டிகள் ஆற்றுக்குள் விழுந்ததில் மணல் கொட்டியது. படம்: ராய்ட்டர்ஸ்