மாலத்தீவு அதிபர் தேர்தல்: எதிர்க்கட்சித் தலைவர் இப்ராஹிம் முஹம்மது வெற்றி

மாலத்தீவு அதிபர் தேர்தல்: எதிர்க்கட்சித் தலைவர் இப்ராஹிம் முஹம்மது வெற்றி

1 mins read
1b031d57-a316-4c98-937d-35cc074b271f
-

மாலி: மாலத்தீவில் நேற்று முன் தினம் நடைபெற்ற அதிபர் தேர் தலில் 58.3 விழுக்காடு வாக்குகள் பெற்று எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராஹிம் முஹம்மது வெற்றி பெற்றார். தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட முடிவுகளில் இது தெரியவந்தது. மாலத்தீவு ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்ட திரு இப்ராஹிம் 133,808 வாக்குகளைப் பெற்றார். தற்போது அந்நாட்டு அதிபராக உள்ள திரு அப்துல்லா யாமீன், மாலத்தீவு முன்னேற்ற கட்சி சார்பில் 95,526 வாக்கு களைப் பெற்று தோல்வியைத் தழுவி னார். இத்தேர்தலில் வாக்கு அளிக்க தகுதி பெற்ற 262,000 வாக்காளர்களில் 88 விழுக்காட் டினர் வாக்களித்தனர். இதனால், மாலத்தீவு ஜனநாயக கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக வீதிகளில் மாலத்தீவு தேசிய கொடியை அசைத்து ஒரு வரை ஒருவர் கட்டித்தழுவி மகிழ்ச்சி யை வெளிப்படுத்தி வருகின்ற னர்.

மாலத்தீவில் அதிபர் தேர்தலை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இறுதி பிரசாரக் கூட்டத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் இப்ராஹிம் முஹம்மது சோலி, தமது கட்சி ஆதரவாளர்கள் முன்னிலையில் உற்சாகத்துடன் துள்ளிக் குதித்தார். படம்: ராய்ட்டர்ஸ்