US$200 பில்லியன் மதிப்பிலான சீனப் பொருட்கள் மீது வரிவிதிப்பு நடப்புக்கு வந்தது

US$200 பில்லியன் மதிப்பிலான சீனப் பொருட்கள் மீது வரிவிதிப்பு நடப்புக்கு வந்தது

2 mins read

வா‌ஷிங்டன்/பெய்ஜிங்: சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்கு மதி செய்யப்படும் 200 பில்லியன் அமெரிக்க டாலர் (S$273 பில்லி யன்) மதிப்பிலான சீனப் பொருட் கள் மீது டிரம்ப் நிர்வாகம் விதித்து உள்ள வரிகள் நேற்று நடப்புக்கு வந்தன. இந்த அதிரடி நடவடிக்கை யினால் இரு நாடுகளுக்கும் இடையி லான வர்த்தகப் போர் இன்னும் மோசமடைந்துள்ளது. அமெரிக்காவின் ஆக அண் மைய இந்த வரிவிதிப்பு வா‌ஷிங்டன் நேரப்படி நேற்று நள்ளிரவு நடப் புக்கு வந்தது. உறைந்த இறைச்சி முதல் தொலைக்காட்சி பாகங்கள் வரை ஏராளமான சீனப் பொருட்கள் வரி விதிப்புக்கு இலக்காகும். இதற்குப் பதிலடி தரும் வித மாக 60 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்கள் மீது சீனாவும் வரி விதித்திருந்தது. சீனாவின் இந்தப் பதிலடி நட வடிக்கையால் கூடுத லாக 267 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப் பிலான சீனப் பொருட் கள் மீது புதிய வரிகளை விதிக்கப் போவ தாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

அவர் மிரட்டியதைப் போலவே இந்தப் புதிய வரிகள் நடப்புக்கு வந்தால், சீனாவிலிருந்து அமெ ரிக்கா கடந்த ஆண்டு இறக்குமதி செய்த அனைத்து பொருட்களும் வரிவிதிப்புக்கு இலக்காகும். உலகின் ஆகப் பெரிய இரு பொருளியல்களான அமெரிக்கா வுக்கும் சீனாவுக்கும் இடையே மோசமடைந்து வரும் வர்த்தகப் போரினால் உலகப் பொருளியல் சூழலிலும் பேரிழப்பு நேரிடலாம் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில், இந்த வாரம் அமெரிக்காவுடன் நடத்த திட்ட மிட்டிருந்த வர்த்தகப் பேச்சுவார்த்தை களை சீனா ரத்துசெய்துள்ளது. சீனத் துணைப் பிரதமர் லீயு ஹே வா‌ஷிங்டன் செல்லமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது.