சீனா பாய்ச்சல்: கத்தியுடன் பேச்சை நடத்த முடியாது

சீனா பாய்ச்சல்: கத்தியுடன் பேச்சை நடத்த முடியாது

2 mins read

கழுத்தில் கத்தியை வைத்து வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை நடத்துவது சாத்தியமல்ல என்று சீனா அமெரிக்காவை சாடியுள்ளது. சீனப் பொருட்கள் மீது மேலும் வரிகளை அமெரிக்கா விதித்து உள்ளது குறித்து சீனா இவ்வாறு கருத்துரைத்துள்ளது. 200 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சீனப் பொருட்- கள் மீது வா‌ஷிங்டனின் வரிவிதிப்பு நேற்று முன்தினம் நடப்புக்கு வந்த- தைத் தொடர்ந்து, இரு நாடு களுக்கும் இடையே நிலவிவரும் வர்த்தகப் போர் குறித்து வணிகத்- துறை துணை அமைச்சர் வாங் ஷாவென் நேற்று கருத்துத் தெரி வித்தார்.

இருதரப்பும் ஒருவரை ஒருவர் சமமாகவும் பரஸ்பர மரியாதை- யுடனும் நடத்தினால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த சீனா தயார் என்று அவர் கூறினார். "இதுபோன்ற பெரிய அளவி- லான வர்த்தகக் கட்டுப்பாடுகளை விதித்துள்ள அமெரிக்கா, கத்தி முனையில் எங்களை மிரட்டுகிறது. இத்தகைய நெருக்கடி சூழலில், பேச்சுவார்த்தைகள் எப்படி நடக்- கும்," என்று செய்தியாளர்களிடம் வாங் ஷாவென் கேள்வி எழுப் பினார். அமெரிக்காவின் பொருளியல் செயலாளர் ஸ்டீவன் மனுச்சின், பேச்சுவார்த்தைகளை நடத்த சீன அதிகாரிகளுக்கு முன்னதாக அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் இந்த அதிரடி வரிவிதிப்பு நடவடிக்கை, இரு நாட்டு அதிகாரி - களின் சந்திப்புக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டது. கடந்த மாதம் வா‌ஷிங்டனில் அமெரிக்க அதிகாரிகளை வான் ஷாவென் சந்தித்திருந்தாலும் பல மாதங்களாக உச்சக்கட்ட சந்திப்பு எதுவும் நிகழவில்லை. இதற்கிடையே சீனாவின் முன்- னணி அரசதந்திரி வாங் யீ, நியூ யார்க்கில் அமெரிக்க வர்த்தகத் தலைவர்களைச் சந்தித்துப் பேசி னார். சீனாவுக்கும் அமெரிக்கா வுக் கும் இடையிலான மோதலால் இரு நாடுகளுக்கும் நஷ்டம் என்று அவர் சொன்னார். நெருக் கடி நிலையில் வா‌ஷிங்டனுடன் பேச்சு- வார்த்தைகளுக்கு இடம் இல்லை என்று அவர் திட்டவட்ட மாகக் கூறினார்.