சிங்கப்பூர் வாகனங்களுக்கு உரிமம்: ஆண்டு இறுதியில் நடப்புக்கு வரும்

சிங்கப்பூர் வாகனங்களுக்கு உரிமம்: ஆண்டு இறுதியில் நடப்புக்கு வரும்

1 mins read
Google News Preferred Icon

பொந்தியான்: VEP எனப்படும் வாகன நுழைவு அனுமதி இவ்வாண்டு இறுதியில் அமல்படுத்தப்படும் என்று மலேசியா வின் சாலைப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இது அமலுக்கு வந்த பின்னர் ஜோகூர் கடற்பாலம் வழியாகவும் மலேசியா=சிங்கப்பூர் இரண்டாவது பாலம் வழியாகவும் நாட்டுக் குள் நுழையும் வாகனங்களுக்கு உரிமம் கட்டாயமாக்கப்படும். உரிமத்தை அமல்படுத்துவதற்கான சோதனைகள் இறுதிக் கட்டத்தில் இருப்பதாகத் தெரிவித்த சாலைப் போக்குவரத்துத் துறை தலைமை இயக்குநர் ஷஹாருதின் காலித், எல்லாவற்றை யும் போக்குவரத்து அமைச்சு இறுதி செய்யும் என்றார். இவ்வாண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட இருந்த உரிம முறை மலேசியா-சிங்கப்பூர், மலேசியா=தாய்லாந்து ஆகியவற்றின் அமலாக்கத்தை தரப்படுத்துவதற்காக ஒத்திப்போடப்பட்டது.