நஜிப் மனைவிக்கு மீண்டும் அழைப்பு

1 mins read
325b3e28-3682-4198-b59a-ca29aa385db2
-

புத்ராஜெயா: முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுவிட்டதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித் துள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக, விசாரணை விவரங்கள் அடங்கிய அறிக்கை தலைமைச் சட்ட அதிகாரியிடம் சமர்ப்பிக்கப் பட்டுவிட்டதாக தலைமை ஆணையாளர் முகம்மது ‌ஷுக்ரி அப்துல் தெரிவித்தார். "புலன்விசாரணை நடத்துவது மட்டுமே ஊழல் தடுப்பு ஆணையத்தின் பணி. ரோஸ்மா மீது வழக்குத் தொடுக்கப்பட வேண்டுமா என் பதை தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் தான் முடிவு செய்யவேண்டும்," என்று அவர் கூறினார்.

இந்நிலையில், ஊழல் தடுப்பு ஆணையத்துடனான திருவாட்டி ரோஸ்மாவின் இரண்டாவது சந்திப்பு இன்று நடைபெறுகிறது. தமது தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு இருக்குமாறு அவருக்கு அனுப்பிய கடிதத்தில் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. அக் கடிதம் நேற்று மாலை ஆணையத்தின் அதிகாரி ஒருவரால் திருவாட்டி ரோஸ்மாவிடம் வழங்கப் பட்டதாக நம்பப்படுகிறது. ஏற்கெனவே கடந்த ஜூன் மாதம், வாக்கு மூலம் அளிக்க புத்ராஜெயாவில் உள்ள தமது தலைமை அலுவலகத்திற்கு வருமாறு திருவாட்டி ரோஸ்மாவுக்கு ஆணையம் அழைப்பாணை அனுப்பி இருந்தது.