ஐக்கிய நாடுகள்: வடகொரியத் தலைவருடனான இரண்டாவது உச்சநிலைக் கூட்டம் பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று தாம் நம்புவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரி வித்துள்ளார். அக்கூட்டம் நடைபெறும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்றும் இருந்தபோதிலும் அதற்கான இடம் இன்னமும் தேர்வு செய்யப் படவில்லை என்றும் அவர் கூறி னார். ஐக்கிய நாடுகள் மன்றத்தில் தென்கொரிய அதிபர் மூன் ஜேவைச் சந்தித்த திரு டிரம்ப், "தலைவர் கிம் மிகவும் வெளிப் படையானவர். திறந்த மனம் கொண்டவர். ஏதேனும் நிகழ வேண்டும் என்று அவர் விரும்பு கிறார். அவருடனான உறவு மிக வும் சிறந்தது. இன்னும் சொல்லப்போனால் அசாதாரண மானது அது," என்றார்.
அதிபர் டிரம்ப்பும் தலைவர் கிம்மும் கடந்த ஜூன் மாதம் முதன்முறையாக சிங்கப்பூரில் சந்தித்துப் பேசினர். இரண்டாவது உச்சநிலைச் சந்திப்பு சிங்கப்பூரைத் தவிர்த்து வேறோர் இடத்தில் நடைபெறக் கூடும் என்று திரு டிரம்ப் கூறி யதாக தென்கொரியாவின் யோன் ஹாப் செய்தி நிறுவனம் குறிப் பிட்டது. தென்கொரிய அதிபர் மூன் கடந்த வாரம் வடகொரியத் தலை வர் கிம் ஜோங் உன்னை மூன் றாவது முறையாகச் சந்தித்துப் பேசினார்.

