பேருந்து கவிழ்ந்ததில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் மரணம்

பேருந்து கவிழ்ந்ததில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் மரணம்

1 mins read
3643a667-b0f5-4e13-b884-d9e40c673c41
-

கென்யாவில் பேருந்து ஒன்று தலைகீழாகக் கவிழ்ந்ததில் குழந்தைகள் உட்பட 51 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றுக் காலை நடந்த இந்த விபத்தில் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்று கென்யா போலிஸ் அச்சம் தெரிவித் துள்ளது. தலைநகர் நைரோபியிலிருந்து மேற்கிலுள்ள கிஸுமு என்ற நகரை நோக்கி சென்றுகொண்டிருந்த அந்தப் பேருந்தில் 52 பேர் பயணம் செய்தனர். ஓட்டுநரின் கட்டுப் பாட்டை இழந்த பேருந்து, சரிவில் கீழே விழுந்து விபத்திற்குள்ளா னது என்று போலிஸ் தகவல் தெரிவித்தது.

விபத்தில் சிக்கி 42 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த 10 பேரில் ஒன்பது பேர் பலியானதால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 51ஆக உயர்ந்துள்ளது. பேருந்தின் மேற்கூரை அப்படியே கழன்று விட்டது என்று உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித் ததாக ஊடகச் செய்திகள் கூறின. 52 பேரில் ஒருவர் மட்டுமே உயிர்பிழைத்துள்ள நிலையில், அவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. கென்யாவின் விரைவுச்சாலை கள் மிகவும் ஆபத்தானவையாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. சாலைப் பாதுகாப்பில் உலகின் மிக மோசமான நாடுகளில் ஒன்றாக கென்யாவை உலக சுகாதார நிறுவனம் பட்டியலிட்டுள்ளது.

கென்யாவின் தலைநகர் நைரோபியில் இருந்து 260 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கெரிச்சோ என்ற நகருக்கு அருகில் நடந்த விபத்தில் சிதைந்து போன பேருந்தைப் பார்வையிடும் பொதுமக்கள்.

படம்: ஈபிஏ