கோலாலம்பூர்: அனைத்து மலேசியர்களும் கூடிய விரைவில் தேசிய அளவிலான ஒரு புதிய மின்னியல் அடையாளத்தைப் பெறலாம் என்று தொடர்பு, பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ நேற்று நடந்த மின்வர்த்தக நிகழ்வு ஒன்றில் கூறினார். இணையத்தில் இயங்கும் நம்பிக்கையான ஒரு தளமாக இதை உருவாக்குவது குறித்துத் தம் அமைச்சு ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்தார். இம்மின்னியல் அடையாள முறை, அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையே நேரடியான, பாதுகாப்பான தொடர்புகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் அரசாங்கச் சேவைகள் பயனீட்டாளர் களுக்கும் வர்த்தகங்களுக்கும் சிறப்பான முறையில் போய்ச் சேர இம்முறை ஏதுவாக அமையும் என்று கூறப்படுகிறது.
மலேசியர்களுக்கு தேசிய மின்னியல் அடையாளம்
1 mins read

