டுட்டர்டே செல்வாக்கைத் தீர்மானிக்கும் தேர்தல்

டுட்டர்டே செல்வாக்கைத் தீர்மானிக்கும் தேர்தல்

1 mins read

மணிலா: பிலிப்பீன்ஸில் நேற்று தொடங்கிய இடைத்தேர்தல், மக்களிடையே அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே பெற்றுள்ள ஆதரவைச் சோதிக்க வல்லது. போதைப்பொருள், ஊழலுக்கு எதிராக முழக்கமிட்டு அவற்றை முடக்குவதற்காக அதிபர் டுட்டர்டே பல முயற்சிகள் எடுத்து வந்தாலும் அவை சவால்களாகவே இருந்து வந்தன. அத்துடன் தற்போது நாட்டின் பொருளியலும் மந்த நிலையில் இருக்கிறது. இச்சூழலில் இந்த இடைத் தேர்தல்வழி மக்களிடையே அதிபர் டுட்டர்டே பெற்றுள்ள செல்வாக்கை அறிய முடியும்.

செனட் சபையில் உள்ள 24 இடங்களில் 12 இடங்களுக்காகவும் பிரதிநிதிகள் சபையில் உள்ள 297 இடங்களுக்காகவும் வேட்பு மனு தாக்கல் செய்ய அரசியல் வாதிகள் தேர்தல் ஆணையத்திற் குள் அணிவகுத்துச் சென்ற வண்ணம் உள்ளதாக தெரிவிக்கப் பட்டது. திரு டுட்டர்டேயின் அரசாங்கத் தின்கீழ் அதிகரித்து வரும் அதிருப்தியைக் கொண்டு நாடாளுமன்றத்தில் கூடுதல் இடங்களைப் பிடிக்க எதிர்க்கட்சி விரும்பினாலும் அதுவும் அவ்வளவு எளிதானதல்ல. திரு டுட்டர்டேயின் அரசியல் கட்சியும் தேர்தலில் போட்டி இடுகிறது. திரு டுட்டர்டேயின் கொள்கைக்கு ஆதரவளிப்போர் மூலம் அவருக்கே பெரும்பான்மை இடங்கள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.