கெடா: மலேசியா முழுவதும் உள்ள உணவகங்கள், காப்பிக் கடைகள், உணவங்காடிக் கடைகள் ஆகிய இடங்களில் அடுத்த ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் புகைபிடிக்கத் தடை விதிக்கப்பட உள்ளது. இக்கட்டாயத் தடை குறித்து நேற்று கெடாவின் மருத்துவ, அறிவியல், தொழில்நுட்பத்துக் கான ஆசிய கழகத்தில் நடைபெற்ற சுகாதார கருத்தரங்கின்போது துணை சுகாதார அமைச்சர் லீ பூன் சாய் அறிவித்தார். குளிரூட்டு வசதி உள்ள, இல்லாத உணவகங்கள், திறந்தவெளி உணவங்காடிகள் என்பவையும் இத்தடைக்கு உட் பட்டவை. இவ்வாறு தடைசெய்யப்பட்ட இடங்களில் புகைபிடிப்போர் பிடி பட்டால் 10,000 ரிங்கிட் (S$3,300) அபராதம் செலுத்தவேண்டும். அத்துடன் தடையை அமல் படுத்தத் தவறும் உணவகங்களுக் கும் 2,500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டது. இதன் தொடர்பில் திறந்த வெளி உணவகங்களில் புகைபிடிக் கக்கூடாது என்னும் சட்டத்தைச் செயல்படுத்த சுகாதார அமைச்சு முயன்று வருவதாக செப்டம்பர் மாதம் 'தி ஸ்டார்' செய்தித்தாள் கூறியிருந்தது.
மலேசியா: அடுத்த ஆண்டிலிருந்து உணவகங்களில் புகைக்கத் தடை
1 mins read

