கோலாலம்பூர் விரைவுச்சாலையில் 20 கி.மீ. தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல்

1 mins read
51c2dbfe-d792-4713-aeba-e22689cd03e7
ஞாயிற்றுக்கிழமையும் போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். - படம்: ஊடகம்

கோலாலம்பூர்: சொந்த ஊரில் நோன்புப் பெருநாள் கொண்டாடிய பலரும் தலைநகருக்குத் திரும்பி வருவதால் கோலாலம்பூர்-காராக் விரைவுச்சாலையில் சனிக்கிழமை (ஏப்ரல் 5) கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

காலை 10.40 மணியளவில் 20 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு வாகனங்கள் வரிசையாக நின்றிருந்ததாக மலேசிய விரைவுச்சாலை ஆணையத்தின் (LLM) பேச்சாளர் ஒருவர் ‘த ஸ்டார்’ இணையச் செய்தியிடம் கூறினார்.

காராக் முதல் லெந்தாங் வரை அந்த வரிசை நீண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

“இது எதிர்பார்த்ததுதான். நோன்புப் பெருநாள் கொண்டாட்டம் முடிந்து ஏராளமானோர் வேலைக்குத் திரும்புவதால் ஞாயிற்றுக்கிழமை வரை இந்தப் போக்குவரத்து நெரிசல் இருக்கும்,” என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அந்தப் பேச்சாளர் பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

தலைநகரை நோக்கிச் செல்லும் வடக்கு-தெற்கு விரைவுச்சாலையிலும் சிறிதளவு நெரிசல் காணப்பட்டதாக அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்