சோல்: தென்கொரியத் தலைநகர் சோலில் உள்ள சாலையில் திடீரென்று ஆழ்குழி ஒன்று ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சாலையின் நடுப்பகுதியில் ஆழ்குழி ஏற்பட்டதை அடுத்து, அவ்வழியாகச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளோட்டி அதற்குள் விழுந்து காணாமல் போனார்.
அவரைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது.
ஆனால் அவரது உடல் குழிக்குள் கண்டெடுக்கப்பட்டது.
இதயச் செயலிழப்பு காரணமாக அந்த 30 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட ஆடவர் மாண்டதாகக் கூறப்படுகிறது.
90 சென்டிமீட்டர் ஆழத்தில் அவர் புதையுண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆழ்குழியின் அகலம் 20 மீட்டர் என்று தெரிவிக்கப்பட்டது.
கொரிய நேரப்படி மாலை 6.29 மணிக்குத் திங்கட்கிழமை (மார்ச் 24) சோலின் கிழக்குப் பகுதியில் இந்த ஆழ்குழி திடீரென ஏற்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
சம்பவம் நிகழ்ந்த இடத்துக்கு மிக அருகில் தொடக்கப்பள்ளி ஒன்று இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆழ்குழி ஏற்பட்டதில் கார் ஒட்டுநர் ஒருவர் காயமடைந்ததாகவும் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆழ்குழி இருக்க இருக்க பெரிதாவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பலர் பாதிக்கப்படாமல் இருக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சோல் மேயர் ஓ சே ஹூன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

