பாகிஸ்தானுக்கு சவூதி அரேபியா 6 பில்லியன் டாலர் நிதியுதவி

பாகிஸ்தானுக்கு சவூதி அரேபியா 6 பில்லியன் டாலர் நிதியுதவி

1 mins read
Google News Preferred Icon

ரியாத்: பாகிஸ்தான் புதிய பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான் கான் அந்நாடு ஏராளமான நிதிச் சுமையில் சிக்கித் தவிப்பதாக தெரிவித்திருந்தார். உலக வங்கி, அனைத்துலகப் பண நிதியம் மற்றும் சில நாடுகளிடமிருந்து கடன் பெற்றிருந்த நிலையில், நலி வடைந்த பொருளியல் நிலையில் இருந்து நாட்டை முன்னேற்றுவதற் கான முயற்சி களில் அவர் தீவிர மாக ஈடுபட்டு வரு கிறார். பாகிஸ்தானின் நிதி நிலவரங் களை ஆய்வு செய்ய அனைத் துலகப் பண நிதியத்தின் உயர் அதிகாரிகள் குழு நவம்பர் 7ஆம் தேதி இஸ்லாமாபாத் வருகிறது.

இது தவிர, அரசு தரப்பில் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளையும் திரு இம்ரான் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், பதவியேற்ற பின்னர் இரண்டாவது முறையாக திரு இம்ரான் சவூதி அரேபியா வுக்குச் சென்றுள்ளார். அவருடன் உயர் அதிகாரிகள் குழுவும் சென்றுள்ளது. சவூதி பேரரசர் சல்மான் மற்றும் அந்நாட்டின் அமைச்சர்களை திரு இம்ரான் குழுவினர் சந்தித்துப் பேசினர்.

நிதிச்சுமையில் சிக்கியுள்ள பாகிஸ் தானுக்கு நிதியுதவியாக 6 பில்லியன் அமெரிக்க டாலர் அளிக்க சவூதி அரசு முன்வந்துள்ளது. இதில் 3 பில்லியன் டாலர் ஓராண் டுக்குள் ரொக்கமாக வழங்கப் படும். மீதமுள்ள தொகையில் சவூதியில் இருந்து கடனுக்கு கச்சா எண்ணெய் வாங்கிக்கொள்ள முடியும்.