ஹாங்காங்: உலகின் ஆக நீண்ட கடற்பாலம் நேற்று வாகனப் போக்குவரத்திற்கு திறக்கப்பட் டது. 55 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்தக் கடற்பாலம், ஹாங்காங், மக்காவ், ஸுஹாய் ஆகிய நகரங்களை இணைக்கிறது. கடல் பாலத்தில் சுமார் 6 கிலோ மீட்டர் நீளமுள்ள ஒருபகுதி கடலுக்குள் செல்கிறது. இந்தக் கடற்பாலத்தில் தனியார் கார்கள், டாக்சிகள், பேருந்துகள், சரக்கு வாகனங்கள் உள்ளிட்டவை செல்லலாம். ஆனால், இதைக் கடக்க தனியார் கார் களுக்கு சிறப்பு அனுமதிச் சீட்டு தேவை எனத் தெரிவிக்கப்பட்டது. முதல் நாளிலேயே பாலத்தில் பயணம் செய்யும் நோக்கில் ஏராளமான பயணிகள் பேருந்து களில் உற்சாகமாக ஏறிச் சென்ற னர்.
இதற்காக ஹாங்காங்கின் பேருந்து முனையங்களில் பல பயணிகள் காலையிலேயே திர ளாகக் கூடினர். பாலத்தை ஒரு பொறியியல் சாதனை என்று பாராட்டுகின்றனர் சிலர்.

