பேங்காக்: இவ்வாண்டு மலேசியப் பொது தேர்தலில் வென்று பக்கத் தான் ஹரப்பான் கூட்டணி ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து அந்நாட்டுப் பிரதமர் மகாதீர் முகம்மது முதன்முறையாக பக்கத்து நாடான தாய் லாந்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். வன்முறை சம்பவங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தென் தாய்லாந்தில் அமைதி நிலைநாட்டப்படுவதற்கான சூழலை அமைக்க உதவ டாக்டர் மகாதீர் பங்காற்ற முடியும் என அந்நாட்டு மக்களிடையே புது நம்பிக்கை பிறந்துள்ளது.
மலேசிய எல்லைக்கு அருகே உள்ள தாய்லாந்தின் தென்பகுதியில் பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழ்கின்றனர். அங்கு முஸ்லிம் போராளிகள் தன்னாட்சி உரிமையைக் கோரி வன்முறையில் ஈடுபட்டு வந்து உள்ளனர். 2014ஆம் ஆண்டிலிருந்து இந்தக் கிளர்ச்சியில் கிட்டத்தட்ட 7,000 அப்பாவி மக்கள் உயிரிழந்த னர். இருப்பினும், அப்பகுதியில் பாதுகாப்பு செயல்முறைகள் வலுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டு உயிரிழப்பு எண்ணிக்கை ஆகக் குறைவாக பதிவானது. தென் தாய்லாந்தில் அமைதிக் கான முயற்சிகளுக்கு வலுச்சே ர்க்கும் விதமாக டாக்டர் மகாதீரின் தாய்லாந்துப் பயணம் அமையும் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சு தெரிவித்து உள்ளது. தாய்லாந்துப் பிரதமர் பிரயுட் சான் ஓ சாவை சந்தித்து டாக்டர் மகாதீர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்ட து.

