102 வயது ஆடவர்மீது குற்றச்சாட்டு

1 mins read

சிட்னி: ஆஸ்திரேலிய சிட்னி நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் 92 வயது மாதை கௌரவமற்ற முறையில் தாக்கியதாக 102 வயது ஆடவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்த மேல் விவரங்களை போலிஸ் வெளியிடவில்லை. பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள அந்த ஆடவர் அடுத்த மாதம் 20ஆம் தேதி நீதிமன்றத்திற்கு வரவேண்டும். 100 வயதைத் தாண்டியவர்கள்மீது குற்றம் சுமத்தப்படுவது அரிது.