கோயில் இடமாற்றம் களேபரத்தில் முடிந்தது

கோயில் இடமாற்றம் களேபரத்தில் முடிந்தது

1 mins read
Google News Preferred Icon

பெட்டாலிங் ஜெயா: யுஎஸ்ஜேயில் உள்ள சீஃபீல்ட் ஸ்ரீ மகா மாரியம் மன் கோயிலை வேறு இடத்திற்கு மாற்ற நேற்று காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் ஆவேசமடைந்த பக்தர்களில் சிலர் ஸ்ரீ மகா மாரியம்மனின் உருவச் சிலை யைக் கட்டிப்பிடித்துத் தர மறுத்த னர். இதனால் பெரும் குழப்பமும் கூச்சலும் ஏற்பட்டது. சம்பவம் பற்றி விளக்கிய மலேசிய இந்திய கல்வி மாற்று சங்கத்தின் தலைவர் இளங்கோவன் அண்ணாமலை, "கோயிலிலிருந்து 2.7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புதிய 0.4 ஹெக்டர் நிலப்பரப்பில் கோயிலை மாற்றுவதற்கு ஆலய நிர்வாகத்தினர் திட்டமிட்டனர்," என்றார்.

ஆனால் பக்தர்களில் சிலர் கோயில் வளாகத்தில் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் உருவச் சிலையை எடுத்துச் செல்வதைத் தடுத்தனர். சில பக்தர்கள் கோயில் வாசலில் காவல் இருந்தனர் என்று அவர் கூறியதாக ஸ்டார்ஆன்லைன் செய்தி குறிப்பிட்டது. இந்நிலையில் கோயில் வாச லையும் கருவறையையும் பக்தர்கள் மூடிவிட்டனர். கோயிலில் நடந்த களேபரத்தின் காணொளி இளங்கோவனின் ஃபேஸ்புக் பக்கத்திலும் பகிர்ந்து கொள்ளப் பட்டது.