விரோதப் போக்கை நிறுத்துங்கள்: டிரம்ப்

விரோதப் போக்கை நிறுத்துங்கள்: டிரம்ப்

1 mins read
97e5f1b5-d5a0-4a00-b565-5f93c87dab75
-
Google News Preferred Icon

வா‌ஷிங்டன்: பகைமை உணர்வை ஊடகங்கள் கைவிட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறைகூவல் விடுத்துள்ளார். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பராக் ஒபாமா, ஹில்லரி கிளிண் டன் உட்பட உயர்மட்ட அரசியல் வாதிகளுக்கு அஞ்சல் மூலம் வெடிகுண்டு அனுப்பியதாகக் கூறப்படும் வேளையில் திரு டிரம்ப் பின் கருத்து வெளியாகியுள்ளது. இதுவரை எந்த வெடிகுண்டும் வெடிக்கவில்லை. புலனாய்வு அதிகாரிகள் உரிய நேரத்தில் வெடிகுண்டுகளைக் கண்டுபிடித்து செயலிழக்கச் செய்துவிட்டனர்.

இந்நிலையில் சந்தேகப் பேர்வழிகளுக்கு மத்திய புலனாய்வுத் துறை வலை வீசியிருக்கிறது. அதிபர் டிரம்ப் வழக்கமாக எதிர்க்கட்சியினரையும் பத்திரிகைகளையும் வசைபாடுவார். ஆனால் இம்முறை ஊடகங்களை அவர் குறை கூறியிருப்பது எதிர்மாறாக உள்ளது என்று அரசியல் விமர் சகர்கள் கூறியுள்ளனர். விஸ்கான்சினில் புதன்கிழமை இரவு நடைபெற்ற பேரணியில் அதிபர் டிரம்ப் பேசினார்.